Muslim99Muslim99
← Tafsir library

11. Hud

Hud · Meccan · 123 ayahs

سُورَةُ هُودٍ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 81–90 of 123

81

قَالُوا۟ يَٰلُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَن يَصِلُوٓا۟ إِلَيْكَ ۖ فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍۢ مِّنَ ٱلَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ إِلَّا ٱمْرَأَتَكَ ۖ إِنَّهُۥ مُصِيبُهَا مَآ أَصَابَهُمْ ۚ إِنَّ مَوْعِدَهُمُ ٱلصُّبْحُ ۚ أَلَيْسَ ٱلصُّبْحُ بِقَرِيبٍۢ

(விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்; "மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?"

வானவர்கள் லூத்திடம் கூறினார்கள்: “லூத்தே! நாங்கள் அல்லாஹ் அனுப்பிய தூதர்களாவோம். உம் சமூகத்தினர் உமக்கு எந்த தீங்கும் இழைத்துவிட முடியாது உம் குடும்பத்தினருடன் இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் இந்த ஊரிலிருந்து வெளியேறிவிடுவீராக. உங்களில் யாரும் பின்னால் திரும்பிப் பார்க்கக்கூடாது. ஆயினும் உம் மனைவியைத் தவிர அவள் கட்டளைக்கு மாறாக திரும்பிப் பார்ப்பாள். உம் சமூகத்தைத் தாக்கும் அதே வேதனை அவளையும் தாக்கும். அவர்களை அழிக்கும் நேரம் அதிகாலையாகும். அது அருகில்தான் உள்ளது.

82

فَلَمَّا جَآءَ أَمْرُنَا جَعَلْنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةًۭ مِّن سِجِّيلٍۢ مَّنضُودٍۢ

எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.

லூதுடைய சமூகத்தை அழிக்குமாறு நம்முடைய கட்டளை வந்த போது அவர்களின் ஊர்களைத் உயர்த்தி தலைகீழாகப் புரட்டி மாற்றி விட்டோம். வரிசையாக அடுக்கப்பட்ட சுட்ட களிமண் கற்களை அவர்கள் மீது தொடர்ந்து பொழியச் செய்தோம்.

83

مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ ۖ وَمَا هِىَ مِنَ ٱلظَّٰلِمِينَ بِبَعِيدٍۢ

அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன் (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.

அந்த கற்கள் அல்லாஹ்வினால் பிரத்யேக அடையாளமிடப்பட்ட கற்களாகும். அந்த கற்கள் குறைஷிகள் மற்றும் இன்னபிற அநியாயக்காரர்களை விட்டும் தூரமாக இல்லை. மாறாக அது அண்மையிலேயே உள்ளது. அல்லாஹ் அதனை எப்பொழுது அவர்கள் மீது இறக்க நாடுவானோ அப்போது இறங்கி விடும்.

84

۞ وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًۭا ۚ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥ ۖ وَلَا تَنقُصُوا۟ ٱلْمِكْيَالَ وَٱلْمِيزَانَ ۚ إِنِّىٓ أَرَىٰكُم بِخَيْرٍۢ وَإِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍۢ مُّحِيطٍۢ

மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்; "என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நிங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலையையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.

மத்யனை நோக்கி அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. மக்களுக்காக நிறுத்தால் அல்லது எடைபோட்டால் நிறுவையையும் அளவையையும் குறைத்து விடாதீர்கள். உங்களுக்கு விசாலமான வாழ்வாதாரமும் அருட்கொடைகளும் வழங்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன். பாவங்களின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளை மாற்றிவிடாதீர்கள். நான் உங்கள் ஒவ்வொருவரையும் அடையும், சூழ்ந்துகொள்ளும் நாளின் வேதனையை அஞ்சுகிறேன். அதிலிருந்து நீங்கள் எங்கும் தப்பி ஓட முடியாது. ஒதுங்கும் இடத்தை பெற்றுக்கொள்ளவும் முடியாது”

85

وَيَٰقَوْمِ أَوْفُوا۟ ٱلْمِكْيَالَ وَٱلْمِيزَانَ بِٱلْقِسْطِ ۖ وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ

"(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்.

சமூகமே! நீங்கள் மற்றவர்களுக்கு அளந்து கொடுத்தால் அல்லது நிறுத்துக் கொடுத்தால் அளவையையும் நிறுவையையும் நியாயமாக முழுமைப்படுத்துங்கள். அளவை நிறுவையில் குறைசெய்தல், ஏமாற்றுதல், மோசடிசெய்தல் ஆகியவற்றினால் மக்களின் உரிமைகளில் எதனையும் குறைத்துவிடாதீர்கள். கொலை மற்றும் இன்னபிற பாவங்களின் மூலம் உலகில் குழப்பம் விளைவிக்காதீர்கள்.

86

بَقِيَّتُ ٱللَّهِ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ ۚ وَمَآ أَنَا۠ عَلَيْكُم بِحَفِيظٍۢ

"நீங்கள் உண்மை முஃமின்களாக இருந்தால், அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு நன்மையுடையதாகும்; நான் உங்களைக் கண்காணிப்பவனும் அல்லன்" என்று கூறினார்.

மோசடி செய்து, பூமியில் குழப்பம் விளைவித்து பெறும் செல்வத்தைவிட மக்களுக்கு நியாயமாக அளிக்க வேண்டியதை அளித்த பிறகு மிஞ்சியிருக்கும் செல்வமே அதிகம் பயனளிக்கக்கூடியது; பெருகக்கூடியது. நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் மீதமுள்ளதைக் கொண்டு திருப்தியடையுங்கள். நான் உங்களின் செயல்களைக் கணக்கிட்டு உங்களைக் கண்காணிப்பவன் அல்ல. மறைவானதையும் இரகசியமானதையும் அறிந்தவனே உங்களின் கண்காணிப்பாளன் ஆவான்.

87

قَالُوا۟ يَٰشُعَيْبُ أَصَلَوٰتُكَ تَأْمُرُكَ أَن نَّتْرُكَ مَا يَعْبُدُ ءَابَآؤُنَآ أَوْ أَن نَّفْعَلَ فِىٓ أَمْوَٰلِنَا مَا نَشَٰٓؤُا۟ ۖ إِنَّكَ لَأَنتَ ٱلْحَلِيمُ ٱلرَّشِيدُ

(அதற்கு) அவர்கள் "ஷுஐபெ! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்" என்று (ஏளனாமாக) கூறினார்கள்.

ஷுஐபின் சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “ஷுஐபே! நீர் அல்லாஹ்வுக்காக தொழும் தொழுகையா, எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்த சிலைகளை வணங்குவதையும், எங்களின் செல்வங்களில் நாங்கள் விரும்பியவாறு செயல்படுவதையும், அவற்றைப் பெருக்குவதையும் நாம் விட்டுவிட வேண்டும் என்று உம்மை சொல்லத் தூண்டுகிறது? நிச்சயமாக நீர் அறிவாளியாகவும் விவரம் உள்ளவராகவும் இருக்கின்றீர். இந்த அழைப்பிற்கு முன்னர் உம்மை நாங்கள் அறிவாளியாகத்தானே அறிந்துள்ளோம். உமக்கு என்னவாயிற்று?

88

قَالَ يَٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍۢ مِّن رَّبِّى وَرَزَقَنِى مِنْهُ رِزْقًا حَسَنًۭا ۚ وَمَآ أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَىٰ مَآ أَنْهَىٰكُمْ عَنْهُ ۚ إِنْ أُرِيدُ إِلَّا ٱلْإِصْلَٰحَ مَا ٱسْتَطَعْتُ ۚ وَمَا تَوْفِيقِىٓ إِلَّا بِٱللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ

(அதற்கு) அவர் கூறினார்; "(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவேகர்க யார்,) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்.

ஷுஐப் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: -“சமூகமே!- நான் என் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரத்தையும் அகப்பார்வையையும் பெற்றிருந்து அவன் எனக்கு தூதுத்துவம் என்னும் தூய்மையான அருட்கொடையையும் வழங்கியிருந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை எனக்குக் கூறுங்கள். நான் உங்களை ஒரு விஷயத்தை விட்டும் தடுத்து விட்டு அதற்கு மாறாக செயல்பட விரும்பவில்லை. உங்கள் இறைவனான அல்லாஹ் ஒருவனின் பக்கம் உங்களை அழைப்பதன் மூலம் என்னால் இயன்றவரை நான் உங்களை சீர்திருத்தம் செய்வதையே விரும்புகிறேன். அல்லாஹ்வே அதற்கான பாக்கியம் அளிக்க முடியும். என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவனையே நான் சார்ந்துள்ளேன். அவன் பக்கமே நான் திரும்ப வேண்டும்.

89

وَيَٰقَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِىٓ أَن يُصِيبَكُم مِّثْلُ مَآ أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَٰلِحٍۢ ۚ وَمَا قَوْمُ لُوطٍۢ مِّنكُم بِبَعِيدٍۢ

"என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!

சமூகமே! என் மீதுள்ள வெறுப்பு நான் கொண்டுவந்ததை நிராகரிக்கும்படி உங்களைத் தூண்ட வேண்டாம். நூஹின் சமூகம் அல்லது ஹூத் உடைய சமூகம் அல்லது ஸாலிஹ் உடைய சமூகம் ஆகியோர் மீது ஏற்பட்ட வேதனையைப் போன்று உங்கள் மீதும் வேதனை ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். லூத்தின் சமூகம் காலத்திலும் இடத்திலும் உங்களைவிட்டும் தூரமாக இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டதை நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள். எனவே படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள்.

90

وَٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ ۚ إِنَّ رَبِّى رَحِيمٌۭ وَدُودٌۭ

"ஆகவே உங்களுடைய இறைவனிடம் நீங்கள் மன்னிப்புக் கோரி இன்னும் அவனிடமே தவ்பா செய்து (அவன் பக்கமே) மீளுங்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்" (என்று கூறினார்).

உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். உங்கள் பாவங்களிலிருந்து அவன் பக்கமே திரும்புங்கள். என் இறைவன் தன் பக்கம் திரும்பக்கூடியவர்களின் மீது மிகுந்த கருணையாளனாகவும், அன்பானவனாகவும் இருக்கின்றான்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.