قَالُوا۟ يَٰلُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَن يَصِلُوٓا۟ إِلَيْكَ ۖ فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍۢ مِّنَ ٱلَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ إِلَّا ٱمْرَأَتَكَ ۖ إِنَّهُۥ مُصِيبُهَا مَآ أَصَابَهُمْ ۚ إِنَّ مَوْعِدَهُمُ ٱلصُّبْحُ ۚ أَلَيْسَ ٱلصُّبْحُ بِقَرِيبٍۢ
(விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்; "மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?"
வானவர்கள் லூத்திடம் கூறினார்கள்: “லூத்தே! நாங்கள் அல்லாஹ் அனுப்பிய தூதர்களாவோம். உம் சமூகத்தினர் உமக்கு எந்த தீங்கும் இழைத்துவிட முடியாது உம் குடும்பத்தினருடன் இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் இந்த ஊரிலிருந்து வெளியேறிவிடுவீராக. உங்களில் யாரும் பின்னால் திரும்பிப் பார்க்கக்கூடாது. ஆயினும் உம் மனைவியைத் தவிர அவள் கட்டளைக்கு மாறாக திரும்பிப் பார்ப்பாள். உம் சமூகத்தைத் தாக்கும் அதே வேதனை அவளையும் தாக்கும். அவர்களை அழிக்கும் நேரம் அதிகாலையாகும். அது அருகில்தான் உள்ளது.