Muslim99Muslim99
← Tafsir library

11. Hud

Hud · Meccan · 123 ayahs

سُورَةُ هُودٍ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 61–70 of 123

61

۞ وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَٰلِحًۭا ۚ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥ ۖ هُوَ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَٱسْتَعْمَرَكُمْ فِيهَا فَٱسْتَغْفِرُوهُ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ ۚ إِنَّ رَبِّى قَرِيبٌۭ مُّجِيبٌۭ

இன்னும், ஸமுது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்; "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்."

ஸமூத் சமூகத்தின்பால் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அவனே உங்களின் தந்தை ஆதமை பூமியின் மண்ணிலிருந்து படைத்ததன் மூலம் உங்களை மண்ணிலிருந்து படைத்தான். உங்களை அதில் வசிப்போராக்கினான். எனவே அவனிடமே மன்னிப்பைக் கோருங்கள். பின்பு நற்காரியங்கள் செய்து தீமைகளைத் தவிர்த்து அவனிடமே மீண்டுவாருங்கள். நிச்சயமாக என் இறைவன் அவனை மட்டுமே வணங்கக்கூடியவர்களுக்கு நெருக்கமானவனாகவும் அவனிடம் பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான்.

62

قَالُوا۟ يَٰصَٰلِحُ قَدْ كُنتَ فِينَا مَرْجُوًّۭا قَبْلَ هَٰذَآ ۖ أَتَنْهَىٰنَآ أَن نَّعْبُدَ مَا يَعْبُدُ ءَابَآؤُنَا وَإِنَّنَا لَفِى شَكٍّۢ مِّمَّا تَدْعُونَآ إِلَيْهِ مُرِيبٍۢ

அதற்கு அவர்கள், "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக் குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்" என்று கூறினார்கள்.

அவருடைய சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “ஸாலிஹே! உமது இந்த அழைப்பிற்கு முன்னால் எங்களிடையே உயர்ந்த அந்தஸ்தை நீர் பெற்றிருந்தீர். நீர் உபதேசம் செய்து, ஆலோசனை வழங்கும் அறிவாளியாக, வருவீர் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். -ஸாலிஹே!- எங்கள் முன்னோர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்று நீர் அழைக்கும் விஷயத்தில் நீர் அல்லாஹ்வின் மீது பொய் கூறுவதாக உம்மைச் சந்தேகிக்கும் அளவுக்கு, நிச்சயமாக நாங்கள் சந்தேகத்தில் இருக்கின்றோம்.”

63

قَالَ يَٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍۢ مِّن رَّبِّى وَءَاتَىٰنِى مِنْهُ رَحْمَةًۭ فَمَن يَنصُرُنِى مِنَ ٱللَّهِ إِنْ عَصَيْتُهُۥ ۖ فَمَا تَزِيدُونَنِى غَيْرَ تَخْسِيرٍۢ

"என் சமூகத்தாரே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடத்திலிருந்து தெளிவான அத்தாட்சியைப் பெற்றிருக்க, அவன் தன்னிடமிருந்து எனக்கு ரஹ்மத்தும் (அருளும்) வழங்கியிருக்க நான் அவனுக்கு மாறு செய்தால், அல்லாஹ்வை விட்டும் எனக்கு உதவி செய்பவர் யார்? நீங்களோ, எனக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கி விடமாட்டீர்கள்" என்று கூறினார்.

ஸாலிஹ் தம் சமூகத்தாரிடம் மறுத்தவராக கூறினார்: “என் சமூகமே! நான் என் இறைவனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீதிருந்து, அவன் எனக்கு தூதுத்துவம் என்னும் அருளையும் வழங்கியிருக்க, அவன் எனக்கு எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டதை விட்டுவிட்டு அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னை யார்தான் காப்பாற்ற முடியும்? நீங்கள் எனக்கு வழிகேட்டையும் அவனது திருப்பொருத்தத்தை விட்டும் விலகிச் செல்வதையே அதிகரிக்கிறீர்கள்.

64

وَيَٰقَوْمِ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمْ ءَايَةًۭ فَذَرُوهَا تَأْكُلْ فِىٓ أَرْضِ ٱللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍۢ فَيَأْخُذَكُمْ عَذَابٌۭ قَرِيبٌۭ

"அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்" (என்று கூறினார்).

என் சமூகமே! இது என்னுடைய நம்பகத் தன்மைக்கு சான்றான அல்லாஹ் அனுப்பிய பெண் ஒட்டகமாகும். அல்லாஹ்வின் பூமியில் அதனை மேய விட்டு விடுங்கள். அதற்கு எந்த இடையூறும் ஏற்படுத்திவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதனைக் கொன்று சிறிது நேரத்தில் வேதனை உங்களைத் தாக்கி விடும்.

65

فَعَقَرُوهَا فَقَالَ تَمَتَّعُوا۟ فِى دَارِكُمْ ثَلَٰثَةَ أَيَّامٍۢ ۖ ذَٰلِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوبٍۢ

ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்); "நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.

நிராகரிப்பில் மிகைத்துச் சென்று அந்த ஒட்டகத்தைக் கொன்றார்கள். ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் ஒட்டகத்தைக் கொன்றதிலிருந்து மூன்று நாட்களுக்கு உங்களது இடத்தில் வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ளுங்கள். பின்னர் அல்லாஹ்வின் வேதனை நிச்சயமாக உங்களைத் தாக்கியே தீரும். அதற்குப் பின் வேதனை வருவது நிகழ்ந்தேறும் வாக்குறுதி அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அது பொய்யுமல்ல. மாறாக அது உண்மையான எச்சரிக்கையாகும்.”

66

فَلَمَّا جَآءَ أَمْرُنَا نَجَّيْنَا صَٰلِحًۭا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ بِرَحْمَةٍۢ مِّنَّا وَمِنْ خِزْىِ يَوْمِئِذٍ ۗ إِنَّ رَبَّكَ هُوَ ٱلْقَوِىُّ ٱلْعَزِيزُ

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.

அவர்களை அழிக்குமாறு நமது நம்முடைய கட்டளை வந்த போது நாம் ஸாலிஹையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால் காப்பாற்றினோம். அந்த நாளின் இழிவு, அவமானத்திலிருந்து அவர்களைப் பாதுகாத்தோம். -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் மிகைத்த வல்லமை மிக்கவனாக இருக்கின்றான். அவனை யாராலும் மிகைத்துவிட முடியாது. எனவேதான் அவன் பொய்ப்பித்த சமூகங்களை அழித்து விட்டான்.

67

وَأَخَذَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ ٱلصَّيْحَةُ فَأَصْبَحُوا۟ فِى دِيَٰرِهِمْ جَٰثِمِينَ

அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்,

அழிவை உண்டாக்கும் ஒரு பயங்கர சப்தம் சமூத் கூட்டத்தாரை தாக்கியது. அதன் பயங்கரத்தால் அவர்கள் செத்துமடிந்தார்கள். அவர்களின் முகங்களில் மண் ஒட்டி முகங்குப்புற வீழ்ந்துகிடந்தார்கள்.

68

كَأَن لَّمْ يَغْنَوْا۟ فِيهَآ ۗ أَلَآ إِنَّ ثَمُودَا۟ كَفَرُوا۟ رَبَّهُمْ ۗ أَلَا بُعْدًۭا لِّثَمُودَ

(அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டதினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர் அறிந்து கொள்வீர்களாக! 'ஸமூது' (கூட்டத்தினர்)க்கு நாசம்தான்.

அவர்கள் தங்களின் ஊர்களில் செல்வச் செழிப்போடு வசிக்காதவர்களைப் போன்று ஆகிவிட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள், ஸமூத் சமூகம் தங்கள் இறைவனை நிராகரித்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

69

وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَآ إِبْرَٰهِيمَ بِٱلْبُشْرَىٰ قَالُوا۟ سَلَٰمًۭا ۖ قَالَ سَلَٰمٌۭ ۖ فَمَا لَبِثَ أَن جَآءَ بِعِجْلٍ حَنِيذٍۢ

நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) 'ஸலாம்' (சொன்னார்கள்; இப்றாஹீமும் "ஸலாம்" (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.

வானவர்கள் மனித உருவில் இப்ராஹீமிடம் வந்து அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இஸ்ஹாக் என்னும் மகன் பிறப்பான் என்றும் பின்னர் யஅகூப் என்னும் மகன் பிறப்பான் என்றும் நற்செய்தி கூறினார்கள். வானவர்கள் அவருக்கு சலாம் கூறினார்கள். அவரும் சலாமுக்குப் பதிலளித்து விட்டு, விரைவாகச் சென்று அவர்களை மனிதர்கள் என்று எண்ணி அவர்கள் உண்பதற்காக பொரித்த காளைக்கன்றைக் கொண்டுவந்தார்.

70

فَلَمَّا رَءَآ أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةًۭ ۚ قَالُوا۟ لَا تَخَفْ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمِ لُوطٍۢ

ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) "பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.

அவர்களின் கைகள் காளைக் கன்றின் மாமிசத்தின்பால் செல்லாததையும் அவர்கள் சாப்பிட மறுத்ததையும் இப்ராஹீம் கண்டு ஐயமுற்று அவர் மனதில் அவர்களைக் குறித்த பயத்தை மறைத்துக் கொண்டார். அவருடைய பயத்தை உணர்ந்த வானவர்கள் அவரிடம், “பயப்படாதீர். நாங்கள் லூத்தின் சமூகத்தைத் தண்டிப்பதற்காக அல்லாஹ் எம்மை அவர்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.