Muslim99Muslim99
← Tafsir library

11. Hud

Hud · Meccan · 123 ayahs

سُورَةُ هُودٍ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 41–50 of 123

41

۞ وَقَالَ ٱرْكَبُوا۟ فِيهَا بِسْمِ ٱللَّهِ مَجْر۪ىٰهَا وَمُرْسَىٰهَآ ۚ إِنَّ رَبِّى لَغَفُورٌۭ رَّحِيمٌۭ

இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.

நூஹ் நம்பிக்கைகொண்ட தம் குடும்பத்தாரிடமும் சமூகத்தாரிடமும் கூறினார்: “கப்பலில் ஏறிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பெயரால் கப்பல் புறப்படும். அவனுடைய பெயராலே அது நிலைகொண்டு விடும். நிச்சயமாக என் இறைவன் தன் பக்கம் மீளும் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக் கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். நம்பிக்கையாளர்களை அவன் அழிவிலிருந்து காத்ததும் அவனது கருணையின் வெளிப்பாடுதான்.

42

وَهِىَ تَجْرِى بِهِمْ فِى مَوْجٍۢ كَٱلْجِبَالِ وَنَادَىٰ نُوحٌ ٱبْنَهُۥ وَكَانَ فِى مَعْزِلٍۢ يَٰبُنَىَّ ٱرْكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ ٱلْكَٰفِرِينَ

பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி ந்ன்ற தம் மகனை நோக்கி "என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!" என்று நூஹ் அழைத்தார்.

மலைகளைப் போன்ற மாபெரும் அலையில் மக்களையும் இன்னபிற உயிரினங்களையும் சுமந்து கொண்டு கப்பல் சென்றது. தன் தந்தை மற்றும் சமூகத்தை விட்டும் ஒரு இடத்தில் ஒதுங்கியிருந்த நிராகரிப்பாளனான தனது மகனை நூஹ் தந்தைப் பாசத்தினால் அழைத்தார். “என் மகனே,வெள்ளத்திலிருந்து தப்பிப்பதற்காக எங்களுடன் கப்பலில் ஏறிக்கொள். நிராகரிப்பாளர்களுடன் இணைந்து விடாதே. அவ்வாறு இணைந்தால் அவர்களுக்கு நேர்ந்த மூழ்கடிக்கும் அழிவு உன்னையும் பாதிக்கும்.”

43

قَالَ سَـَٔاوِىٓ إِلَىٰ جَبَلٍۢ يَعْصِمُنِى مِنَ ٱلْمَآءِ ۚ قَالَ لَا عَاصِمَ ٱلْيَوْمَ مِنْ أَمْرِ ٱللَّهِ إِلَّا مَن رَّحِمَ ۚ وَحَالَ بَيْنَهُمَا ٱلْمَوْجُ فَكَانَ مِنَ ٱلْمُغْرَقِينَ

அதற்கு அவன்; "என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின்மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்" எனக் கூறினான். இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டiளியிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகவி விட்டான்.

நூஹின் மகன் அவரிடம் கூறினான்: “நீர் என்னை மூழ்கடிப்பதை விட்டும் என்னைப் பாதுகாப்பதற்காக உயரமான ஒரு மலையில் ஒதுங்கிக் கொள்வேன்.” நூஹ் தம் மகனிடம் கூறினார்: “இன்றைய தினம் அல்லாஹ்வின் தண்டனையான வெள்ளத்தில் மூழ்குவதிலிருந்து அவன் கருணை காட்டியவர்களைத் தவிர யாரும் தப்பமுடியாது.” அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே அவருக்கும் நிராகரித்த அவருடைய மகனுக்குமிடையே ஒரு அலை குறுக்கிட்டது. எனவே அவருடைய மகன் அவனது நிராகரிப்பினால் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டவனாகி விட்டான்.

44

وَقِيلَ يَٰٓأَرْضُ ٱبْلَعِى مَآءَكِ وَيَٰسَمَآءُ أَقْلِعِى وَغِيضَ ٱلْمَآءُ وَقُضِىَ ٱلْأَمْرُ وَٱسْتَوَتْ عَلَى ٱلْجُودِىِّ ۖ وَقِيلَ بُعْدًۭا لِّلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ

பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.

வெள்ளம் முடிந்த பிறகு அல்லாஹ் பூமிக்குக் கட்டளையிட்டான்: “பூமியே! உன் மேற்பரப்பிலுள்ள வெள்ள நீரை உறிஞ்சி விடு.” வானத்திற்குக் கட்டளையிட்டான்: “வானமே! நிறுத்திக்கொள், மழை பொழியாதே.” தண்ணீர் குறைந்து பூமி காய்ந்து விட்டது. அல்லாஹ் நிராகரிப்பாளர்களை அழித்துவிட்டான். கப்பல் ஜுதி மலையின் நின்றது. “நிராகரித்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய சமூகத்துக்கு அழிவு உண்டாகட்டும்” என்று கூறப்பட்டது.

45

وَنَادَىٰ نُوحٌۭ رَّبَّهُۥ فَقَالَ رَبِّ إِنَّ ٱبْنِى مِنْ أَهْلِى وَإِنَّ وَعْدَكَ ٱلْحَقُّ وَأَنتَ أَحْكَمُ ٱلْحَٰكِمِينَ

நூஹ் தன் இறைவனிடம் "என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்" எனக் கூறினார்.

நூஹ் தம் இறைவனிடம் உதவிகோரியவராக அவனை அழைத்தார். அவர் கூறினார்: “என் மகனும் நீ காப்பாற்றுவேன் என்று வாக்களித்த என் குடும்பத்தைச் சார்ந்தவன்தானே. உன் வாக்குறுதி உண்மையானது. நீ ஒருபோதும் வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படமாட்டாய். நீ தீர்ப்புக் கூறுவோரில் மிக சிறந்த நீதமானவனும் மிகவும் அறிந்தவனுமாவாய்.”

46

قَالَ يَٰنُوحُ إِنَّهُۥ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُۥ عَمَلٌ غَيْرُ صَٰلِحٍۢ ۖ فَلَا تَسْـَٔلْنِ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۖ إِنِّىٓ أَعِظُكَ أَن تَكُونَ مِنَ ٱلْجَٰهِلِينَ

அ(தற்கு இறை)வன் கூறினான்; "நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்."

அல்லாஹ் நூஹிடம் கூறினான்: “நூஹே! நீர் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்ட உம் மகன் நான் காப்பாற்றுவதாக வாக்களித்த உம் குடும்பத்தைச் சார்ந்தவன் அல்ல. ஏனெனில் அவன் நிராகரிப்பாளன். உம்முடைய கேள்வி உமக்குப் பொருத்தமற்ற கேள்வியாகும். உம் தரத்தில் இருப்பவர்களுக்கு அது உகந்ததல்ல. உமக்கு அறிவில்லாத விஷயங்களைக் குறித்து என்னிடம் கேட்காதீர். நீர் அறிவீனர்களில் ஒருவராக ஆகி என் அறிவுக்கும் நோக்கத்திற்கும் முரணானவற்றைக் கேட்பதை விட்டும் நான் உம்மை எச்சரிக்கிறேன்.”

47

قَالَ رَبِّ إِنِّىٓ أَعُوذُ بِكَ أَنْ أَسْـَٔلَكَ مَا لَيْسَ لِى بِهِۦ عِلْمٌۭ ۖ وَإِلَّا تَغْفِرْ لِى وَتَرْحَمْنِىٓ أَكُن مِّنَ ٱلْخَٰسِرِينَ

"என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்" என்று கூறினார்.

நூஹ் கூறினார்: “என் இறைவா! எனக்கு அறிவில்லாத விஷயங்களை உன்னிடம் கேட்பதை விட்டும் என்னை பாதுகாக்கும்படி நான் உன்னிடம் உதவி தேடுகிறன். நீ என் பாவத்தை மன்னித்து என்மீது கருணை காட்டவில்லையென்றால் மறுமையில் தமது பங்குகளை இழந்து நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாகி விடுவேன்.

48

قِيلَ يَٰنُوحُ ٱهْبِطْ بِسَلَٰمٍۢ مِّنَّا وَبَرَكَٰتٍ عَلَيْكَ وَعَلَىٰٓ أُمَمٍۢ مِّمَّن مَّعَكَ ۚ وَأُمَمٌۭ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌۭ

"நூஹே! உம் மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும் அபிவிருத்திகளுடனும் நீர் இறங்குவீராக் இன்னும் சிலமக்களுக்கு நாம் சகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களை தீண்டும்" என்று கூறப்பட்டது.

அல்லாஹ் நூஹிடம் கூறினான்: “நூஹே! கப்பலிலிருந்து நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் உம்மீதும், உமக்குப் பிறகு உருவாகும் உம்முடன் கப்பலில் இருந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள் மீதும் அல்லாஹ் பொழிந்த ஏராளமான அருட்கொடைகளைக் கொண்டும் பூமியில் இறங்குவீராக. அவர்களின் சந்ததிகளிலிருந்து நிராகரிப்பாளர்களும் தோன்றுவார்கள். நாம் இவ்வுலக வாழ்வில் அவர்களை அனுபவிக்கச் செய்வோம். அவர்கள் வாழ்வதற்குத் தேவையானவற்றை வழங்குவோம். பின்னர் மறுமை நாளில் வேதனை மிக்க தண்டனை நம்மிடமிருந்து அவர்களுக்கு கிடைக்கும்.

49

تِلْكَ مِنْ أَنۢبَآءِ ٱلْغَيْبِ نُوحِيهَآ إِلَيْكَ ۖ مَا كُنتَ تَعْلَمُهَآ أَنتَ وَلَا قَوْمُكَ مِن قَبْلِ هَٰذَا ۖ فَٱصْبِرْ ۖ إِنَّ ٱلْعَٰقِبَةَ لِلْمُتَّقِينَ

(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).

நூஹின் இந்த சம்பவம் மறைவான செய்திகளில் உள்ளவையாகும். தூதரே! நீரும் உம் சமூகமும் நாம் உமக்கு அறிவித்த இந்த வஹிக்கு முன்னர் இதனை அறிந்திருக்கவில்லை. நூஹ் பொறுமை செய்தது போல் நீரும் உம் சமூகத்தினரின் தொல்லைகளையும் நிராகரிப்பையும் பொறுத்துக் கொள்வீராக. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பவர்களுக்கே வெற்றி நிச்சயம்.

50

وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًۭا ۚ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ ۖ إِنْ أَنتُمْ إِلَّا مُفْتَرُونَ

ஆது' சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்; "என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.

ஆத் சமூகத்தின் பக்கம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். அவர் அவர்களிடம் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாரையும் இணையாக்காதீர்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் பொய்யர்களாகவே இருக்கின்றீர்கள்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.