Muslim99Muslim99
← Tafsir library

11. Hud

Hud · Meccan · 123 ayahs

سُورَةُ هُودٍ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 11–20 of 123

11

إِلَّا ٱلَّذِينَ صَبَرُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ أُو۟لَٰٓئِكَ لَهُم مَّغْفِرَةٌۭ وَأَجْرٌۭ كَبِيرٌۭ

ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.

ஆனால் வெறுப்பானவற்றைத் தாங்கிக்கொண்டு வழிபாடுகளிலும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்வதிலும் பொறுமையைக் கடைப்பிடித்து, நற்செயல்கள் புரிந்தவர்களைத் தவிர. அவர்களது நிலமை வேறு. விரக்தி, அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறத்தல், மக்களை அவமதித்தல். ஆகிய பண்புகள் அவர்களிடம் காணப்படாது. இந்த பண்புகளை உடையவர்களது பாவங்களுக்கு அவர்களது இறைவனிடம் மன்னிப்பு உண்டு. மறுமையில் அவர்களுக்கு மிகப் பெரும் கூலியும் உண்டு.

12

فَلَعَلَّكَ تَارِكٌۢ بَعْضَ مَا يُوحَىٰٓ إِلَيْكَ وَضَآئِقٌۢ بِهِۦ صَدْرُكَ أَن يَقُولُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَآءَ مَعَهُۥ مَلَكٌ ۚ إِنَّمَآ أَنتَ نَذِيرٌۭ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ وَكِيلٌ

(நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, "அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?" என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும். நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.

தூதரே! -அவர்களின் நிராகரிப்பு, பிடிவாதம், சான்றுகளைக் கோருதல் ஆகியவற்றை நீர் எதிர்கொள்வதனால்- அல்லாஹ் உமக்கு அவர்களிடம் எடுத்துரைக்கும்படி கட்டளையிட்டவற்றில் அவர்களுக்குச் செய்வது சிரமமான சிலவற்றை நீர் எடுத்துரைக்காமல் விட்டு விடுவீர் போலும்; “இவர் மீது இவரைச் செல்வந்தராக்கும் ஒரு பொக்கிஷம் இறக்கப்படக் கூடாதா” அல்லது “இவருடன் இவரை உண்மைப்படுத்தும் வானவர் ஒருவர் வந்திருக்கக் கூடாதா” என்று அவர்கள் கூறாமல் இருப்பதற்காக அதனை எடுத்துரைப்பதன் மூலம் உமது உள்ளம் இறுகி விடும் போலும். இதன் காரணமாக உமக்கு அறிவிக்கப்பட்ட எதையும் விட்டு விடாதீர். உமக்கு அல்லாஹ் எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டதை எடுத்துரைத்து எச்சரிக்கை செய்பவர் மட்டுமே. அவர்கள் கேட்கும் சான்றுகளைக் கொண்டு வருவது உமது பணியல்ல. அல்லாஹ் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.

13

أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۖ قُلْ فَأْتُوا۟ بِعَشْرِ سُوَرٍۢ مِّثْلِهِۦ مُفْتَرَيَٰتٍۢ وَٱدْعُوا۟ مَنِ ٱسْتَطَعْتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَٰدِقِينَ

அல்லது "இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்" என்று அவர்கள் கூறுகிறார்களா? "(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

“முஹம்மது குர்ஆனை சுயமாகப் புனைந்து கொண்டார். அது அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கப்பட்ட வஹி அல்ல” என்று இணைவைப்பாளர்கள் கூறுகிறார்களா? -தூதரே!- நீர் அவர்களிடம் சவால் விடுத்தவராகக் கூறுவீராக: “நீங்கள் புனையப்பட்டதாக வாதிடும் குர்ஆனைப் போன்று உண்மையற்ற இந்த குர்ஆனில் உள்ளதைப் போன்ற பத்து அத்தியாயங்களைப் புனைந்து கொண்டு வாருங்கள் பார்க்கலாம். குர்ஆன் புனைந்து கூறப்பட்டது என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்காக உங்களால் உதவிக்கு அழைக்க முடிந்தவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்.

14

فَإِلَّمْ يَسْتَجِيبُوا۟ لَكُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّمَآ أُنزِلَ بِعِلْمِ ٱللَّهِ وَأَن لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَهَلْ أَنتُم مُّسْلِمُونَ

அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கா விட்டால்; "அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே அருளப்பட்டது; இன்னும் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறில்லை; இனியேனும் நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுவீர்களா?" (என்று கூறவும்.)

நம்பிக்கையாளர்களே!- நீங்கள் அவர்களிடம் வேண்டியதை இயலாமையினால் அவர்களால் கொண்டுவர முடியவில்லையெனில் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள், “நிச்சயமாக குர்ஆன் அல்லாஹ் தன் தூதர் மீது தன் அறிவுடன் இறக்கிய வேதமாகும். அது புனைந்து கூறப்பட்டதல்ல.” அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். தெளிவான இந்த ஆதாரங்களுக்குப் பிறகு அல்லாஹ்வுக்கு நீங்கள் அடிபணிவீர்களா?

15

مَن كَانَ يُرِيدُ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَٰلَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.

யார் தம் செயல்களின் மூலம் மறுமையை விரும்பாமல் இவ்வுலகத்தையும் அழியக்கூடிய அதன் இன்பங்களையும் விரும்புவார்களோ நாம் அவர்களின் செயல்களுக்கான கூலியை ஆரோக்கியம், செல்வ வளம், அமைதி போன்ற வடிவில் இவ்வுலகிலேயே வழங்கிவிடுவோம். அவர்களின் செயல்களுக்கான கூலியிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது.

16

أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ لَيْسَ لَهُمْ فِى ٱلْءَاخِرَةِ إِلَّا ٱلنَّارُ ۖ وَحَبِطَ مَا صَنَعُوا۟ فِيهَا وَبَٰطِلٌۭ مَّا كَانُوا۟ يَعْمَلُونَ

இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன் அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!

இழிவான இந்த நோக்கம் உடையவர்களுக்கு மறுமையில் நரக நெருப்பில் நுழைவதைத் தவிர வேறு எந்தக் கூலியும் இல்லை. அவர்களது செயல்களுக்கான கூலி அவர்களை விட்டும் சென்று விடும். அவர்களது செயல்கள் வீணாகிவிடக் கூடியன. ஏனெனில் ஈமானும் சரியான நோக்கமும் அவைகளுக்கு இருக்கவில்லை. எனவே அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியையும் மறுமையின் வீட்டையும் அதன் மூலம் நாடவில்லை.

17

أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٍۢ مِّن رَّبِّهِۦ وَيَتْلُوهُ شَاهِدٌۭ مِّنْهُ وَمِن قَبْلِهِۦ كِتَٰبُ مُوسَىٰٓ إِمَامًۭا وَرَحْمَةً ۚ أُو۟لَٰٓئِكَ يُؤْمِنُونَ بِهِۦ ۚ وَمَن يَكْفُرْ بِهِۦ مِنَ ٱلْأَحْزَابِ فَٱلنَّارُ مَوْعِدُهُۥ ۚ فَلَا تَكُ فِى مِرْيَةٍۢ مِّنْهُ ۚ إِنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّكَ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ

எவர் தன் இறைவனிடமிருந்து (பெற்ற)தெளிவின் மீது இருக்கிறாரோ மேலும் இறைவனிடமிருந்து ஒரு சாட்சியாளர் எவரிடம் (பக்க பலமாய்) வந்திருக்கிறாரோ மேலும் இதற்கு முன்னால் மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறதோ அவர்கள் தான் இதனை நம்புவார்கள்; ஆனால் (இக்) கூட்டதார்களில் எவர் இதை நிராகரிக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் நரக நெருப்பேயாகும். ஆதலால் (நபியே!) இதைப் பற்றி நீர் சந்தேகத்தித்திலிருக்க வேண்டாம் - இ(வ்வேதமான)து நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

தம் இறைவனிடமிருந்து ஆதாரத்தைப் பெற்று, அவனிடமிருந்துள்ள சாட்சியான ஜிப்ரீல் அவரைத் தொடரும் முஹம்மது நபியும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் வழிகேட்டில் தடுமாறித் திரியும் நிராகரிப்பாளர்களும் சமமாக மாட்டார்கள். அவரது தூதுக்கு குர்ஆனுக்கு முன் மூஸாவின் மீது மக்களுக்கு வழிகாட்டியாகவும் அருளாகவும் இறக்கப்பட்ட தவ்ராதும் சான்று பகர்கின்றது. முஹம்மதின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் குர்ஆனையும் அவர் மீது இறக்கப்பட்டதையும் உண்மைப்படுத்துகிறார்கள். அதனை நிராகரிக்கும் பிற சமயத்தினர் மறுமைநாளில் நரகத்தையே தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடமாகப் பெறுவார்கள். -தூதரே!- குர்ஆனைக் குறித்தும் அது கூறும் அவர்களுக்கு வாக்களிக்கப்ட்ட இடம் குறித்தும் சந்தேகம் கொண்டு விடாதீர். அது சந்தேகமற்ற உண்மையாகும். மனிதர்களில் பெரும்பாலோர் தெளிவான ஆதாரங்களும் சான்றுகளும் இருந்தும் நம்பிக்கை கொள்வதில்லை.

18

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا ۚ أُو۟لَٰٓئِكَ يُعْرَضُونَ عَلَىٰ رَبِّهِمْ وَيَقُولُ ٱلْأَشْهَٰدُ هَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ كَذَبُوا۟ عَلَىٰ رَبِّهِمْ ۚ أَلَا لَعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ

அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; "இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்" என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.

அல்லாஹ்வுக்கு இணை உண்டு, அல்லது மகன் உண்டு என்று இட்டுக்கட்டிக் கூறுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறுயாருமில்லை. அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டுபவர்கள் மறுமை நாளில் தங்கள் இறைவனுக்கு முன்னால் அவர்களின் செயல்களைக் குறித்து விசாரிக்கப்படுவதற்காக நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக வானவர்களும் தூதர்களும் “இவர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டி அவனுக்கு இணை உண்டு, மகன் உண்டு என்று கூறினார்கள் என்று.” சாட்சி கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் விஷயத்தில் பொய்கூறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்ட இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாகட்டும்.”

19

ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًۭا وَهُم بِٱلْءَاخِرَةِ هُمْ كَٰفِرُونَ

அவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கின்றார்கள்; மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள் - இவர்கள் தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்.

அவர்கள் அல்லாஹ்வின் நேரான வழியை விட்டும் மக்களைத் தடுத்தார்கள். அவனுடைய பாதையில் யாரும் செல்லாதிருக்க அதில் கோணல் ஏற்படுவதை நாடினார்கள். அவர்கள் மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நிராகரித்து மறுக்கிறார்கள்.

20

أُو۟لَٰٓئِكَ لَمْ يَكُونُوا۟ مُعْجِزِينَ فِى ٱلْأَرْضِ وَمَا كَانَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ مِنْ أَوْلِيَآءَ ۘ يُضَٰعَفُ لَهُمُ ٱلْعَذَابُ ۚ مَا كَانُوا۟ يَسْتَطِيعُونَ ٱلسَّمْعَ وَمَا كَانُوا۟ يُبْصِرُونَ

இவர்கள் பூமியில் (அல்லாஹ் திட்டமிட்டிருப்பதைத்) தோற்கடித்து விடமுடியாது, அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு வேறு பாதுகாவலர்கள் இல்லை; இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும்; அவர்கள் (நல்லவற்றைக்) கேட்கும் சக்தியை இறந்து விட்டார்கள் - இவர்கள் (நேர்வழியைக்) காணவும் மாட்டார்கள்.

இந்த பண்புகளை உடையவர்கள் அல்லாஹ்வின் வேதனை இறங்கினால் அதிலிருந்து இப்பூமியில் எங்கும் விரண்டோட சக்தியற்றவர்களாவர். அல்லாஹ்வின் வேதனையை அவர்களை விட்டும் தடுக்கும் அல்லாஹ்வைத் தவிரவுள்ள எந்த உதவியாளர்களும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு விட்டதனாலும் பிற மக்களையும் அதனை விட்டுத் தடுத்ததனாலும் மறுமை நாளில் அவர்களின் வேதனை இன்னும் அதிகரிப்படும். அவர்கள் இவ்வுலகில் சத்தியத்தையும் நேர்வழியையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவியேற்பவர்களாக இருக்கவில்லை; சத்தியத்தை அவர்கள் கடுமையாக புறக்கணித்ததனால் பிரபஞ்சத்தில் காணப்படும் அல்லாஹ்வின் சான்றுகளை பயனளிக்கும் விதத்தில் பார்க்கக்கூடியவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.