Muslim99Muslim99
← Tafsir library

11. Hud

Hud · Meccan · 123 ayahs

سُورَةُ هُودٍ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 121–123 of 123

121

وَقُل لِّلَّذِينَ لَا يُؤْمِنُونَ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنَّا عَٰمِلُونَ

நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் (நபியே!) நீர் கூறுவீராக் "நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செயல்படுகிறோம்."

தூதரே!- அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாத அவனை ஒருமைப்படுத்தாதவர்களிடம் நீர் கூறுவீராக: “சத்தியத்தைப் புறக்கணித்து அதனை விட்டும் தடுக்கும் உங்களின் வழியில் நீங்கள் செயல்படுங்கள். சத்தியத்தில் உறுதியாக இருந்து அதன்பால் மக்களை அழைத்து அதில் பொறுமையாக இருந்து நாங்களும் எங்களின் வழியில் செயல்படுகிறோம்.

122

وَٱنتَظِرُوٓا۟ إِنَّا مُنتَظِرُونَ

நீங்களும் (உங்கள் போக்கின் முடிவை) எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நாங்களும் (அவ்வாறே) எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்."

எங்கள் மீது இறங்கக் கூடியதை நீங்கள் எதிர்பாருங்கள். உங்கள் மீது இறங்கக் கூடியதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

123

وَلِلَّهِ غَيْبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ ٱلْأَمْرُ كُلُّهُۥ فَٱعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ ۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ

வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பாரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை.

வானங்களிலும் பூமியிலும் மறைவாக இருப்பவற்றின் அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவற்றில் எதுவும் அவனை விட்டும் மறைவதில்லை. மறுமை நாளில் அவன் பக்கமே அனைத்து விவகாரங்களும் திரும்பும். எனவே -தூதரே!- அவனை மட்டுமே வணங்குவீராக. உமது எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்திருப்பீராக. நீங்கள் செய்பவற்றை உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. மாறாக அவற்றை அவன் நன்கறிந்தவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் கூலி வழங்குவான்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.