Muslim99Muslim99
← Tafsir library

11. Hud

Hud · Meccan · 123 ayahs

سُورَةُ هُودٍ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 111–120 of 123

111

وَإِنَّ كُلًّۭا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَٰلَهُمْ ۚ إِنَّهُۥ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌۭ

நிச்சயமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய இறைவன் அவர்களுடைய செயல்களுக்கு உரிய கூலியை முழமையாகக் கொடுப்பான் - நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை அறிந்தவனாக இருக்கின்றான்.

தூதரே!- முரண்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய செயல்களுக்கான கூலியை உம் இறைவன் முழுமையாக வழங்கிடுவான். அவர்கள் நன்மை செய்திருந்தால் அவர்களுக்கு நற்கூலி வழங்கப்படும். தீமை செய்திருந்தால் அதற்கான தண்டனையைப் பெறுவார்கள். அவர்கள் செய்யும் துல்லியமானவற்றையும் அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

112

فَٱسْتَقِمْ كَمَآ أُمِرْتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا۟ ۚ إِنَّهُۥ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌۭ

நீரும் உம்மோடு திருந்தியவரும் ஏவப்பட்டவாறே உறுதியாக இருப்பீர்களாக் வரம்பு மீறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை கவனித்தவனாக இருக்கின்றான்.

தூதரே!- அல்லாஹ் உமக்குக் கட்டளையிட்டபடி நேரான பாதையை பின்பற்றுவதில் உறுதியாக இருப்பீராக. அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்தவற்றிலிருந்து விலகியிருப்பீராக. உம்முடன் தவ்பா செய்த நம்பிக்கை கொண்டவர்களும் நிலைத்திருக்கட்டும். பாவங்கள் புரிந்து வரம்பு மீறிவிடாதீர்கள். நீங்கள் செய்யக்கூடியவற்றை அவன் பார்ப்பவனாக இருக்கின்றான். உங்களின் செயல்களில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

113

وَلَا تَرْكَنُوٓا۟ إِلَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ فَتَمَسَّكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِنْ أَوْلِيَآءَ ثُمَّ لَا تُنصَرُونَ

இன்னும், யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் - அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும்; அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை; மேலும் (நீங்கள் அவனுக்கெதிராக வேரறவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள்.

அநியாயக்காரர்களின் பக்கம் அவர்களுக்கு விட்டுக்கொடுத்தோ அவர்களுடன் நட்புகொண்டோ சாய்ந்துவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் நரக நெருப்பு உங்களைத் தாக்கி விடும். அதிலிருந்து அல்லாஹ்வைத் தவிர உங்களைப் பாதுகாக்கும் பாதுகாவலன் யாரும் இல்லை. பின்னர் உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

114

وَأَقِمِ ٱلصَّلَوٰةَ طَرَفَىِ ٱلنَّهَارِ وَزُلَفًۭا مِّنَ ٱلَّيْلِ ۚ إِنَّ ٱلْحَسَنَٰتِ يُذْهِبْنَ ٱلسَّيِّـَٔاتِ ۚ ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّٰكِرِينَ

பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்.

தூதரே!- பகலின் ஆரம்பம் முடிவு ஆகிய இரு ஓரங்களிலும் இரவு நேரங்களிலும் தொழுகையை சிறந்த முறையில் நிறைவேற்றுவீராக. நிச்சயமாக நற்செயல்கள் சிறிய பாவங்களைப் போக்கி விடுகின்றன. மேற்கூறப்பட்ட விஷயங்கள் அறிவுரை பெறக்கூடியவர்களுக்கு அறிவுரையாகவும் படிப்பினை பெறக்கூடியவர்களுக்கு படிப்பினையாகவும் இருக்கின்றது.

115

وَٱصْبِرْ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ

(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.

உமக்கு கட்டளையிடப்பட்ட நிலைத்திருத்தல் மற்றும் ஏனையவற்றை நிறைவேற்றுவதிலும் வரம்பு மீறல் அநியாயக்காரர்களின் பக்கம் சாய்தல் ஆகிய தடுக்கப்பட்டவற்றை விட்டுத் தவிர்ந்திருப்பதிலும் பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை ஒருபோதும் வீணாக்குவதில்லை. மாறாக அவர்களின் செயல்களில் சிறந்தவற்றை ஏற்றுக் கொள்கிறான். அவர்கள் செய்தவற்றில் சிறந்தவற்றுக்கான கூலியை அளித்துவிடுகிறான்.

116

فَلَوْلَا كَانَ مِنَ ٱلْقُرُونِ مِن قَبْلِكُمْ أُو۟لُوا۟ بَقِيَّةٍۢ يَنْهَوْنَ عَنِ ٱلْفَسَادِ فِى ٱلْأَرْضِ إِلَّا قَلِيلًۭا مِّمَّنْ أَنجَيْنَا مِنْهُمْ ۗ وَٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مَآ أُتْرِفُوا۟ فِيهِ وَكَانُوا۟ مُجْرِمِينَ

உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்லச் செருக்கையே பின்பற்றுகிறார்கள்; மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள்.

உங்களுக்கு முன்னர் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட சமூகங்களிலுள்ள நல்லவர்கள் தங்களின் சமூகங்களை நிராகரிப்பை விட்டும் பாவங்கள் மூலம் பூமியில் குழப்பம் செய்வதை விட்டும் தடுத்திருக்க வேண்டாமா? அவர்களில் குறைவானவர்களே குழப்பம் செய்வதை விட்டும் மக்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை அவர்களது அநியாயக்கார சமூகங்களை நாம் அழித்த போது காப்பாற்றினோம். அவர்களின் சமூகங்களிலுள்ள அநியாயக்காரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆடம்பர வாழ்வில் திளைத்திருந்தார்கள். அவர்களது அந்தப் பின்பற்றுதலால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.

117

وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ ٱلْقُرَىٰ بِظُلْمٍۢ وَأَهْلُهَا مُصْلِحُونَ

(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிக்கப்படமாட்டான்.

தூதரே!- உம் இறைவன் எந்த ஊரையும் அங்கு வசிப்பவர்கள் பூமியில் சீர்திருத்தம் செய்பவர்களாக இருக்கும் நிலையில் அழித்துவிட மாட்டான். நிராகரிப்பு, அநியாயம் மற்றும் பாவங்களின் மூலம் குழப்பம் விளைவிக்கக்கூடியவர்கள் உள்ள ஊர்களையே அவன் அழிக்கிறான்.

118

وَلَوْ شَآءَ رَبُّكَ لَجَعَلَ ٱلنَّاسَ أُمَّةًۭ وَٰحِدَةًۭ ۖ وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ

உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

தூதரே!- உம் இறைவன் மக்கள் அனைவரையும் சத்தியத்தின் மீது நிலைத்திருக்கும் ஒரு சமூகமாக ஆக்க நாடியிருந்தால் அவன் ஆக்கியிருப்பான். ஆயினும் அவன் அவ்வாறு நாடவில்லை. மன இச்சையைப் பின்பற்றுவதனாலும் அநியாயம் செய்வதனாலும் அவர்கள் எப்போதும் அதில் முரண்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

119

إِلَّا مَن رَّحِمَ رَبُّكَ ۚ وَلِذَٰلِكَ خَلَقَهُمْ ۗ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ

(அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர் இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான்; "நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்" என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும்.

ஆயினும் நேர்வழியை அடைவதற்கு உம் இறைவன் கருணை காட்டியோரைத் தவிர. அவர்கள் அவனை ஒருமைப்படுத்துவதில் முரண்பட மாட்டார்கள். கருத்து வேறுபாடுகளைக் கொண்ட இந்த சோதனைக்காகவே அவன் அவர்களைப் படைத்துள்ளான். அவர்களில் துர்பாக்கியசாலிகளும், பாக்கியசாலிகளும் இருக்கிறார்கள். -தூதரே!- மனித, ஜின் இனத்தில் ஷைத்தான்களைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு நான் நரகத்தை நிரப்புவேன் என்று உம் இறைவன் ஆரம்பத்திலே விதித்த அவனுடைய வார்த்தை நிறைவேறி விட்டது.

120

وَكُلًّۭا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنۢبَآءِ ٱلرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِۦ فُؤَادَكَ ۚ وَجَآءَكَ فِى هَٰذِهِ ٱلْحَقُّ وَمَوْعِظَةٌۭ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ

(நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன.

தூதரே!- உமக்கு முன்னர் வாழ்ந்த தூதர்களின் செய்திகளில் நாம் உமக்கு எடுத்துரைக்கும் ஒவ்வொரு செய்தியையும் உமது உள்ளத்தை சத்தியத்தின் மீது உறுதிப்படுத்தவே கூறுகிறோம். இந்த அத்தியாயத்தில் சந்தேகமற்ற சத்தியமும் நிராகரிப்பாளர்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலைக் கொண்டு பயனடையும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டலும் உம்மிடம் வந்துள்ளது.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.