Muslim99Muslim99
← Tafsir library

11. Hud

Hud · Meccan · 123 ayahs

سُورَةُ هُودٍ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 101–110 of 123

101

وَمَا ظَلَمْنَٰهُمْ وَلَٰكِن ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ ۖ فَمَآ أَغْنَتْ عَنْهُمْ ءَالِهَتُهُمُ ٱلَّتِى يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ مِن شَىْءٍۢ لَّمَّا جَآءَ أَمْرُ رَبِّكَ ۖ وَمَا زَادُوهُمْ غَيْرَ تَتْبِيبٍۢ

அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். உம் இறைவனிடமிருந்து கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த அவர்களின் தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை; மேலும் அவை அவர்களுக்கு நஷ்டத்தை தவிர (வேறெதையும்) அதிகரிக்கச் செய்யவில்லை.

நாம் அவர்களுக்கு அளித்த தண்டனையின் மூலம் அவர்கள் மீது நாம் அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அழிவிற்கான காரணிகளைத் தேடி தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டார்கள். -தூதரே- அவர்களை அழிக்குமாறு அல்லாஹ்வின் கட்டளை வந்த போது அவர்கள் மீது இறங்கிய தண்டனையை அவனை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்கள் எதுவும் அவர்களை விட்டும் தடுக்கவில்லை. இந்த தெய்வங்கள் அவர்களுக்கு நஷ்டத்தையும் அழிவையுமே அதிகப்படுத்தின.

102

وَكَذَٰلِكَ أَخْذُ رَبِّكَ إِذَآ أَخَذَ ٱلْقُرَىٰ وَهِىَ ظَٰلِمَةٌ ۚ إِنَّ أَخْذَهُۥٓ أَلِيمٌۭ شَدِيدٌ

அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்.

எல்லா காலகட்டங்களிலும் இடங்களிலும் மறுக்கும் சமூகங்களைப் பிடிக்கும் அல்லாஹ்வின் பிடி அவ்வாறுதான் இருக்கும். நிச்சயமாக அநியாயக்கார ஊர்களை அல்லாஹ் பிடிக்கும் பிடி நோவினை மிக்க பலமான பிடியாகும்.

103

إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّمَنْ خَافَ عَذَابَ ٱلْءَاخِرَةِ ۚ ذَٰلِكَ يَوْمٌۭ مَّجْمُوعٌۭ لَّهُ ٱلنَّاسُ وَذَٰلِكَ يَوْمٌۭ مَّشْهُودٌۭ

நிச்சயமாக மறுமை நாளின் வேதனையைப் பயப்படுகிறவர்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது; அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் - அன்றியும் அவர்கள் யாவரும் (இறைவன் முன்னிலையில்) கொண்டுவரப்படும் நாளாகும்.

நிச்சயமாக அநியாயக்கார அந்த ஊர்களை அல்லாஹ் கடுமையாகப் பிடித்ததில் மறுமை நாளின் வேதனையை அஞ்சக்கூடியவர்களுக்கு படிப்பினையும் அறிவுரையும் அடங்கியுள்ளன. அந்த நாள் மனிதர்கள் அனைவரையும் விசாரணை செய்வதற்காக அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளாகும். அது மஹ்ஷர்வாசிகள் சமூகமளிக்கும் ஒரு நாளாகும்.

104

وَمَا نُؤَخِّرُهُۥٓ إِلَّا لِأَجَلٍۢ مَّعْدُودٍۢ

குறிப்பிட்ட தவணைக்காகவே தவிர அதனை நாம் பிற்படுத்தவில்லை.

சமூகமளிக்கும் அந்த நாளை எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட தவணைக்காகவே நாம் தாமதப்படுத்துகிறோம்.

105

يَوْمَ يَأْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ إِلَّا بِإِذْنِهِۦ ۚ فَمِنْهُمْ شَقِىٌّۭ وَسَعِيدٌۭ

அந்நாள் வரும்போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது; இன்னும், அவர்களிர் தூபாக்கிய சாலிகளும் இருப்பர்; நற்பாக்கி சாலிகளும் இருப்பர்.

அந்த நாள் வரும் போது எவரும் அவனுடைய அனுமதியின்றி ஆதாரத்துடன் பேசவோ அல்லது பரிந்துரை செய்யவோ முடியாது. அப்போது மனிதர்கள் இரு வகையினராக இருப்பார்கள். (முதல் வகையினர்), நரகத்திற்குச் செல்லும் துர்பாக்கியசாலிகள். (இரண்டாவது வகையினர்), சுவனத்திற்குச் செல்லும் பாக்கியசாலிகள்.

106

فَأَمَّا ٱلَّذِينَ شَقُوا۟ فَفِى ٱلنَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌۭ وَشَهِيقٌ

தூபாப்பிய சாலிகள் (நரக) நெருப்பில் (எறியப்பட்டு) இருப்பார்கள். அதில் அவர்களுக்கு பெருங்கூச்சலும், முணக்கமும்(தான்) இருக்கும்.

நிராகரிப்பினாலும் தீய செயல்களினாலும் துர்பாக்கியம் அடைந்தவர்கள் நரகத்தில் நுழைவார்கள். அதில் அவர்களை பீடிக்கும் சுவாலையின் அகோரம் தாங்க முடியாமல் அவர்களின் சப்தங்களும் மூச்சுகளும் உயர்ந்து விடும்.

107

خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَ ۚ إِنَّ رَبَّكَ فَعَّالٌۭ لِّمَا يُرِيدُ

உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நீடிக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ந்நரகத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள்; நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.

அவர்கள் அங்கு நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாது. அல்லாஹ் நாடினால் ஓரிறைக் கொள்கையில் நிலைத்திருந்து பாவம் செய்தவர்களைத் தவிர. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்யக்கூடியவன். யாரும் அவனை நிர்ப்பந்திக்க முடியாது.

108

۞ وَأَمَّا ٱلَّذِينَ سُعِدُوا۟ فَفِى ٱلْجَنَّةِ خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَ ۖ عَطَآءً غَيْرَ مَجْذُوذٍۢ

நற்பாக்கிய சாலிகளோ சவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட் கொடையாகும்.

நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்து அல்லாஹ்வின் அருளைப் பெற்ற பாக்கியசாலிகள் வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை சுவனத்தில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். சுவனம் நுழைய முன் விசுவாசிகளிலுள்ள பாவிகளில் நரகம் நுழைய வேண்டும் என அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. நிச்சயமாக சுவனவாசிகளுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் முடிவே இல்லாதது.

109

فَلَا تَكُ فِى مِرْيَةٍۢ مِّمَّا يَعْبُدُ هَٰٓؤُلَآءِ ۚ مَا يَعْبُدُونَ إِلَّا كَمَا يَعْبُدُ ءَابَآؤُهُم مِّن قَبْلُ ۚ وَإِنَّا لَمُوَفُّوهُمْ نَصِيبَهُمْ غَيْرَ مَنقُوصٍۢ

(நபியே!) இவர்கள் வணங்குபவை பற்றி நீர் சந்தேகப்பட வேண்டாம்; (இவர்களுக்கு) முன் இவர்களுடைய மூதாதையர் வணங்கி வந்த பிரகாரமே தான் இவர்களுக்கும் வணங்குகிறார்கள்; நிச்சயமாக (தண்டனைக்குரிய) இவர்களின் பங்கைக் குறைவின்றி, முழமையாக நாம் இவர்களுக்குக் கொடுப்போம்.

தூதரே!- இந்த இணைவைப்பாளர்கள் வணங்குவது தீயது என்பதில் சந்தேகம் கொண்டு விடாதீர். அது சரியானது என்பதற்கு அவர்களிடம் மார்க்க ரீதியான, அறிவு பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. தங்கள் முன்னோர்களை குருட்டுத்தனமாக பின்பற்றுவதே அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதற்கான காரணமாகும். நாம் அவர்களுக்கு அளிக்கும் வேதனையின் பங்கை குறைவின்றி நிறைவாக வழங்கிடுவோம்.

110

وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ فَٱخْتُلِفَ فِيهِ ۚ وَلَوْلَا كَلِمَةٌۭ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَفِى شَكٍّۢ مِّنْهُ مُرِيبٍۢ

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது; உமது இறைவனிடமிருந்து முந்தி விட் வாக்கு இல்லை என்றால் இவர்கள் மத்தியிலே முடிவு செய்யப்பட்டிருக்கும். நிச்சயமாக இவர்கள் இதை (குர்ஆனை)ப் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.

நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். மக்கள் அதில் முரண்பட்டார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்; சிலர் நிராகரித்தார்கள். உடனுக்குடன் அல்லாஹ் தண்டிக்க மாட்டான்; மாறாக மறுமை நாள் வரை ஒரு நோக்கத்தோடு வேதனையைத் தாமதப்படுத்துவான் என்ற அவனுடைய விதி முந்தியிராவிட்டால் இவ்வுலகில் அவர்களுக்குத் தக்க தண்டனையை அவன் வழங்கியிருப்பான். நிச்சயமாக நிராகரிப்பாளர்களான யூதர்களும் இணைவைப்பாளர்களும் குர்ஆனைக் குறித்து கடும் சந்தேகத்திலே உள்ளனர்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.